காங்கிரஸ் மாநில தலைவர் திடீரென ராஜினாமா.. இக்கட்டான நிலையில் கட்சி!
அசாம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபேன் குமார் போரா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை தன்னை உதாசீனப்படுத்துவதாகவும், உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலை விமர்சித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அசாம் காங்கிரஸின் கடைசி இந்து தலைவர்" என்று பூபேன் போராவை குறிப்பிட்டுள்ளார். மேலும், காங்கிரஸின் அடித்தளத்தில் உள்ள இந்து தலைவர்கள் தங்களது பக்கம் வர தொடங்கியுள்ளதாகவும், அடுத்த 15 நாட்களில் 5 எம்.எல்.ஏ-க்கள் வரை கட்சி மாறுவார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.
2021-2025 வரை மாநில தலைவராக இருந்து கட்சியை மறுகட்டமைப்பு செய்த போரா, ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய கௌரவ் கோகோய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கௌரவ் கோகோய் உள்ளிட்ட தலைவர்கள் போராவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Edited by Siva