அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையிலான அணியில் இருந்த மைத்ரேயன் பின்னர் பொது குழு கூடுவதற்கு முந்தைய நாள் திடீரென எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு மாறினார்
அதன் பின்னர் தற்போது மீண்டும் மைத்ரேயன், ஓபிஎஸ் அணியில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva