தொடர்புடைய செய்திகள்
- விவசாய கடன்கள் ரத்து : முதல்வர் அறிவிப்பு !விவசாயிகள் மகிழ்ச்சி
- திடீரென முதல்வரைச் சந்தித்த விஜயபாஸ்கர் – குட்கா விசாரணை எதிரொலி ?
- மூன்று மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்
- சேலம் 8 வழி சாலைக்கு 11 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு; முதலமைச்சர் புதிய தகவல்
- மத்திய பிரதேச முதல்வரை அதிகாரபூர்வமாக அறிவித்த ராகுல்காந்தி
நான் பார்த்த முதல்வர்களில் எடப்பாடி தான் பெஸ்ட்: பிரபல நடிகை
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி முதல் தற்போதைய சூர்யா வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை பழம்பெரும் நடிகை சரோஜாதேவிக்கு உண்டு. இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற 'சென்னையில் திருவையாறு' தொடக்க விழாவில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த நிலையில் சிறப்புரை ஆற்றிய சரோஜாதேவி கூறியதாவது: நான் இதுவரை பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள். தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்
மேலும் எடப்பாடி அவர்கள் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்டுரையில்
