சேலம் 8 வழி சாலைக்கு 11 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு; முதலமைச்சர் புதிய தகவல்

eps
Last Modified சனி, 15 டிசம்பர் 2018 (12:15 IST)
சேலம் எட்டு வழிச்சாலைக்கு 11 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது. இதனை எதிர்த்து மக்கள் பலர் நீதிமன்றங்களை நாடினர்.  இதனையடுத்து மத்திய அரசு இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்தது.
 
இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு 11% பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 89% பேர் ஆதரவாக உள்ளனர்.  நிலம் கையகப்படுத்துவோருக்கு உகந்த இழப்பீடு வழங்கப்படும். அரசு ஒருபோதும் மக்களுக்கு எதிராக செயல்படாது என அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :