ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (17:12 IST)

விவசாய கடன்கள் ரத்து : முதல்வர் அறிவிப்பு !விவசாயிகள் மகிழ்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற   கமல்நாத் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல் கையெழுத்து இட்டிருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் பதிவியை ஏற்றுள்ள கமல்நாத் விவசாய கடன்களை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
முதல்வராக கமல்நாத் பதவியேற்றதும் முதல் வேலையாக ரூ.2 லட்சம் அளவிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும்  கோப்பில் முதன் முதலாகக் கையெழுத்திட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.
 
மக்களிடையே வாக்குகள் கேட்கும் போது அளித்த  வாக்குறுதிகளை மத்திய பிரதேசத்தில் கங்கிரஸார் நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர் என்று  செய்திகள் தெரிவிக்கின்றன.
 
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என கூறி 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவிற்கு இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.