திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (07:55 IST)

மத்திய பிரதேச முதல்வரை அதிகாரபூர்வமாக அறிவித்த ராகுல்காந்தி

நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் மூன்று பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டபோதிலும், மூன்று மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தாமதம் செய்து வந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்பார் என ராகுல்காந்தி அதிகாரபூர்வமாக அறிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்னும் இரு மாநில முதல்வர்களை அவர் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்கவுள்ள கமல்நாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மட்டுமின்றி இம்மாநிலத்தில் இருந்து 9 முறை மக்களவைக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.