தொடர்புடைய செய்திகள்
- நாயுடன் உடவுறவு கொண்ட ஓல்டு மேன் .... ‘அந்த கசமுசா காட்சி ‘ இணையதளத்தில் அம்பலம்...
- தலித் இனத்தை சேர்ந்தவர் அனுமான்: ஓட்டுக்காக கதையளக்கும் பாஜக!
- முதல்வரிடம் கஜா நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர்
- ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது சவாலானது - நித்யா மேனன் ஓபன் டாக்!
- தெறிக்கவிட்ட வேட்பாளர்: ஓட்டுக்காக குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டு அலப்பறை
ரோட்டோர டீக்கடையில் டீ குடித்த முதல்வர்-துணை முதல்வர்
அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் டீ குடிப்பது, பேருந்தில் செல்வது ஆகியவை சர்வசாதாரணமாக நடந்து வரும் நிகழ்வுகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் முதல்வரை அருகில் இருந்து பார்ப்பதே அரிதான காரியமாக இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று கஜா புயல் பாதிப்பை பார்வையிட நாகை மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல் ஓபிஎஸ் ஆகியோர் ரோட்டோர கடையில் டீ குடித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இன்று சென்னையில் இருந்து ரயிலில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்த்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவியை செய்தனர். மேலும் மக்களோடு மக்களாக இருவரும் பழகியது ஆச்சரியப்பட வைத்தது
இந்த நிலையில் புயல் நிவாரண பணியை பார்வையிட்டு திரும்பும்போது திருத்துறைப்பூண்டி டவுன் பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது டீக்கடைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கு டீ குடித்தனர். பின்னர் டீ நன்றாக இருந்ததாக டீக்கடைக்காரரை பாராட்டிவிட்டு குடித்த டீக்கு பணம் கொடுத்து சென்றனர். கேரளாவை போல் தமிழகத்திலும் எளிமையான முதல்வரை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
அடுத்த கட்டுரையில்
