புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (20:27 IST)

முதல்வரிடம் கஜா நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக சார்பில் கஜா பொது நிவாரண நிதியாக ரூ.1 கோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடுத்தார்.

டெல்டா பகுதியை கடுமையாக தாக்கி சேதம்  விளைவித்த கஜா புயலால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு கடும் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைக்க பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பாக கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார்.

மேலும் இன்று ஒரே நாளில் கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் 10 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் இதுவரை 33 கோடியே 66 லட்சத்து 80 ஆயிரத்து 583 ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.