தொடர்புடைய செய்திகள்
- அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை! – எந்தெந்த மாவட்டங்களில்?
- ஜெயக்குமார்தான் சார்பட்டா டான்சிங் ரோஸ்!? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல பதில்!
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு; அடுத்தடுத்து பரபரப்பு!
- 10 நிமிஷத்துல இதை அப்டேட் செய்யலைனா; மோசடி மெசேஜ்கள்! – காவல்துறை எச்சரிக்கை!
- அரசியல் உரிமைகளுக்காக போராடும் தலைவர்! – ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஓபிஎஸ்ஸை தொடர்ந்து டெல்லி புறப்படும் ஈபிஎஸ்! – பிரதமரிடம் பேசப்போவது என்ன?
நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கு இன்று டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கினைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை டெல்லிக்கு பயணமாக உள்ளார்.
டெல்லியில் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
