வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூலை 2021 (09:26 IST)

அரசியல் உரிமைகளுக்காக போராடும் தலைவர்! – ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனரான ராமதாஸ் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாள் பாமக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ” பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.