தொடர்புடைய செய்திகள்
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு; அடுத்தடுத்து பரபரப்பு!
- 10 நிமிஷத்துல இதை அப்டேட் செய்யலைனா; மோசடி மெசேஜ்கள்! – காவல்துறை எச்சரிக்கை!
- அரசியல் உரிமைகளுக்காக போராடும் தலைவர்! – ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
- 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
- வாஸ்து படி மதிற்சுவர் எப்படி அமைக்க வேண்டும்? அறிந்து கொள்வோம்
ஜெயக்குமார்தான் சார்பட்டா டான்சிங் ரோஸ்!? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல பதில்!
சார்பட்டா திரைப்படம் குறித்த ஜெயக்குமாரின் கருத்து குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வைரலாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த படம் 1970களில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் திமுக, அதிமுக கட்சி கொடி, பெயர்கள் வெளிப்படையாகவே இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவுக்கு புகழ்பாடும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவையும், எம்ஜிஆரையும் கீழ்மை படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு தற்போது பதிலளித்த மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ஜெயக்குமார் பேசிய வீடியோவை பார்த்தேன். அதேபோல அந்த படத்தில் வரும் டான்சிங் ரோஸுக்கு பதிலாக ஜெயக்குமார் பாக்ஸிங் செய்யும் வீடியோவை சேர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவும் பார்த்தேன்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
