1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Environmental activist missing mugilan Posters Posting by CPCID

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை காணவில்லை : சுவரொட்டிகளை ஒட்டியது சிபிசிஐடி

Environmental activist
சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமாகி இன்றோடு 28 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், முகிலன் மாயமாகிவிட்டதாக சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது சிபிசிஐடி. 
சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் முகிலன் சென்னையில் இருந்து மதுரைக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு ரயிலில் சென்றார்.  ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவரை கண்டுபிடிக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து  முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார், துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதில் முகிலனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர் பிப்.15-ந் தேதி காணாமல் போய்விட்டதாகவும், அவரை பற்றிய தெரிந்தால் தகவல் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிட்டாங்க... பார் நாகராஜ்!