திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (08:17 IST)

அனுமதி வாங்கினாதான் திறக்க முடியும்! – ஹோட்டல்கள், மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் திரையரங்குகள், திருமண மண்டபங்கள் திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே திறக்கமுடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணவும், தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.