வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (19:44 IST)

தமிழக உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 1 முதல் பல கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன
 
குறிப்பாக உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடலாம் என்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து உணவகங்களை நடத்தலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் ஹோட்டல்களில் குளிர்சாதன வசதியை மட்டும் பயன்படுத்த தமிழக அரசு அனுமதிக்கவில்லை 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மத்திய அரசின் விதிகளை பின்பற்றி குளிர்சாதன வசதியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. உணவகங்களில் தேவையான அளவு குளிர்சாதன வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதையே காட்டுகிறது