1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Engineer who cheated 8 women and married

8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இன்ஜினியர்!

8  பெண்களை ஏமாற்றி திருமணம்
8  பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதால் ஒரு இஞ்சினியர் மீது பாதிகப்பட்டுள்ள  பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆந்திரா  மாநிலம குண்டூரில் வசித்து வருபவர் சிவசங்கர் பாபு. இவர் அங்குள்ள ஒரு சாப்ட்வேர்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர்  திருமணம் தகவல் மையங்களில் தனக்கு லட்சக்கணக்கில்  சம்பளம் வாங்குவதாக விளம்பரம் செய்து, விவாகரத்து பெற்ற பெண்களைத் தொடர்ந்து கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து இவர் மீது சில பெண்கள் காதலில் விழுந்துள்ளனர்.

அதன்பின்னர், அவர்களிட்ம் இருந்து,  நகைகள்,  மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் சிவசங்கர் பாபு.  இவரால் பாதிகப்பட்ட சில பெண்கள் தற்போத் கர்ப்பமாகியுள்ள நிலையில்  சுமார் 8  பெண்கள் சிவசங்கர் மீது ஆந்திர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
புத்தமத தலைவர் தலாய்லாமா லடாக் விசிட்: பெரும் வரவேற்பு