1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Significant profits for 2019-20 Sovereign Gold Bond investors; Check maturity price

தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சரியான ஜாக்பாட்.. 318% லாபம்..

gold price
2019-20-ம் நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை குறித்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்குக் கணிசமான லாபம் கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் முதலீடு செய்யப்பட்டபோது அதன் விலை ரூ.3,393 ஆக இருந்தது.
 
 தற்போது முதிர்வு காலத்தின் அடிப்படையில் அதன் விலை ரூ.14,199 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ.10,806 லாபம் கிடைத்துள்ளது. இது சதவீத அடிப்படையில் சுமார் 318.47% லாபமாகும். 
 
தங்கத்தின் மீதான முதலீடு எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது என்பதற்கு இந்தத் தரவுகள் சிறந்த சான்றாகத் திகழ்கின்றன. அரசின் இந்தத் தங்கப் பத்திரத் திட்டம், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த நிதி நன்மைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
காமராஜர் ஆட்சிக்கு பின் விஜய் ஆட்சியில் தான் லஞ்சம் இல்லை: ப சிதம்பரம்