திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (11:23 IST)

மாத சம்பளத்துக்கு மனைவியாக இருக்க சொன்ன தொழிலதிபர்… நடிகை நீது சந்திரா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

நடிகை நீது சந்திரா தமிழ் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

தமிழில் யாவரும் நலம், யுத்தம் செய், தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நீத்துசந்திரா. ஆனால் அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் “என்னிடம் பணமோ, வாய்ப்புகளோ இப்போது இல்லை. முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை ஆடிஷனுக்கு அழைத்து நிராகரித்துவிட்டார். ஒரு தொழிலதிபர் என்னிடம் மாதம் 25 லட்சம் தருகிறேன். எனக்கு மனைவியாக இருக்கிறாயா என்று கேட்டார். அவர் அப்படி கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பல முறை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது” என கூறியுள்ளார்.