1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Enforcement officers raid in courier office

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கொரியர் அலுவலகத்தில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

அமலாக்கத்துறை
சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இன்று அதிகாலை முதல் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை குறித்து விரைவில் அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழக்கு: என்ன காரணம்?