1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Enforcement raid in aadav arjun house at chennai

விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்..!

ஆதவ் அர்ஜூன்
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து துணை பொதுச் செயலாளர் என்ற பதவியை பெற்ற ஆதவ் அர்ஜுன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள ஐந்து இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். அதில் ஒன்று சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்த ஆதவ் அர்ஜுன் வீடு என்று கூறப்படுகிறது

ஆதவ் அர்ஜுன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி .வருவதாகவும் தேனாம்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது

அது மட்டும் இன்றி ஆதவ் அர்ஜுனனுக்கு சொந்தமான நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த ஆதவ் அர்ஜூன் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பிஜு ஜனதா தளம் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: ஒடிசாவில் பாஜக தனித்து போட்டி..!