தவெக எம்.எல்.ஏவிடம் 35 கோடி பேரம்!.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை!...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாகவும் ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. எம்.எல்.ஏ இளையராஜாவே காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சிலர் கரூரை சேர்ந்தவர்கள் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சொன்னதன் பேரிலேயே அவர்கள் பேரரத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
எனவே செந்தில் பாலாஜியின் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். எனவே, அவர்கள் இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர்.
இந்நிலையில் தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் ஹவாலா பணம் கை மாறியிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது.