திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (10:15 IST)

டியூஷன் டீச்சரிடம் அத்துமீறிய மாணவன் – கன்னியாகுமரியில் நடந்த கொடூரம் !

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள டியூஷன் ஆசிரியை ஒருவரிடம் மாணவன் ஒருவன் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நகருக்கு அருகேயுள்ள் ஆலன்சோலை எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார் அந்த பெண்.  மேலும் இவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியுஷனும் எடுத்து வந்துள்ளார். அவரிடம் 11 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனும் டியூஷன் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அம்மாணவன் ஆசிரியை மேல் பொருந்தாக் காமம் கொண்டுள்ளார். ஆசிரியைத் தனியாக இருந்த நேரத்தில் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் ஆசிரியை அதற்கு ஒத்துக் கொள்ளாமல் கூச்சல் போட ஆரம்பித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளான்.

ஆசிரியையின் அலறல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது சம்மந்தமாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள மாணவனைத் தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.