புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (21:13 IST)

ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுமுறை 26 வாரங்கள்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு 9 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது  தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் 26 வாரங்கள் ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என புதிய சட்டத் திருத்தத்தை, கேரள மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
 
இதுவரை தனியார் நிறுவனங்கள் 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு அளித்து வரும் இனிமேல் இரண்டு மடங்கிற்கும் மேலாக கர்ப்பிணி பெண்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்பதும் நாட்டிலேயே முதல்முறையாக  தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கும் 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வகை செய்யும் சட்டம் கேரளாவில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கேரள மாநில அரசின் இந்த முடிவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டிருந்ததாகவும் இதற்கான ஒப்புதலை தற்போது மத்திய அரசு அளித்துள்ளதையடுத்து, இச்சட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகவும் கேரள மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.