வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (16:58 IST)

’வயதான பாட்டிக்கு’ உடை அணிவித்த பெண் காவலர் : முன்னாள் முதல்வர் வெளியிட்ட வைரல் வீடியோ !

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தனது டுவிட்டர் பக்கத்தில், வயதான பாட்டிக்கு, பெண் போலீஸ் அதிகாரி பாசத்துடன் ஆடை அணிவிக்கும் ஒரு வீடியோவை பதிவிட்டு, அந்த பெண் போலீஸ் அதிகாரியை வாழ்த்தியுள்ளார்.
அதில், தாமோ மாவட்டத்தில் மாகரோன் காவல் நிலையத்தின் பொறுப்பாளராக இருக்கும் ஷ்ரத்தா சுக்லாவுக்கு மத்தியப் பிரதேசம் பெருமை அளிக்கக் கடமைப்பட்டுள்ளது.  
 
மகள்கள் எல்லோருடைய துயரத்தையும் புரிந்துகொள்கிறார்கள், அவர்கள் ஒவ்வொரு வீட்டின் வெளிச்சம். இவற்றிலிருந்து, படைப்பு ஆசீர்வதிக்கப்படுகிறது. அதுவே இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் வளமாக்கும். மகள் ஷ்ரத்தாவின் பாசம், ஆசீர்வாதம், வாழ்த்துக்கள்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த பெண் போலீஸ் அதிகாரியின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.