தொடர்புடைய செய்திகள்
- முடிவுக்கு வந்த ரெய்ட்: ரூ.120 கோடி கணக்கில் வராத முதலீடுகள் - சிக்கலில் பால் தினகரன்!
- சிவனுக்கு நாகலிங்க பூவை பூஜிப்பதின் பலன்கள் !!
- பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய குறிப்புகள் !!
- ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...?
- நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்
உயிருடன் கொளுத்தப்பட்ட யானை: 3 மாத ரணவலிக்கு பின் மரணம்!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ElephantDeath எனும் ஹேச்க்டேக் டிரெண்டாகி வருகிறது.
நீலகிரியில் மாவநல்லா பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு யானையை காட்டுக்குள் திருப்பியனுப்ப டயரில் தீவைத்து கொளுத்தி யானை மீது வீசியதில் அதன் காது, முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
3 மாதங்களாக முதுகில் காயங்களுடன் சுற்றித்திரிந்த அந்த யானை ஜனவரி 19 ஆம் தேதி உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வத்தளங்களில் வெளியாகி பலர் மனதை ரணமாக்கியது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவைத்ததாக 2 பேரை வனத்துறை கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ElephantDeath எனும் ஹேச்க்டேக் டிரெண்டாகி வருகிறது.
