வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (11:46 IST)

நாளை மின்சார ரயில்கள் ரத்து.! எந்த ரூட் தெரியுமா.? இதோ அட்டவணை..!

Chennai Train
சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
 
துதொடர்பாக தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
அதன்படி, மதுரையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நிற்காது.
 
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (09420) நாளை (ஞாயிறு) முதல் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. 
 
செங்கல்பட்டில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17651) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
 
செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17643) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
 
தாம்பரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12759) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும். 
 
சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக , சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

 
அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.