திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (11:18 IST)

ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்.! சர்வதேச அரசியலில் பரபரப்பு.!!

Rahul
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியது இருநாட்டு தலைவர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
இந்தாண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் பைடனே, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், வயது முதிர்வு காரணமாக பைடனை திரும்ப பெற வேண்டும் என ஜனநாயக கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், காங்கிரஸ் கட்சி எம்.பி.யும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
 
பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிய ஜனநாயக கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் பின்வாங்க மாட்டேன் என பைடன் திட்டவட்டமாக கூறி வருகிறார். இச்சூழலில், ராகுல் காந்தியிடம் கமலா ஹாரிஸ் தொலைப்பேசியில் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.