வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (15:45 IST)

2 ஆண்டு எல்.எல்.எம் சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் எப்போது? அம்பேத்கர் பல்கலை அறிவிப்பு..!

இரண்டு ஆண்டு எல்.எல்.எம் சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் அளிக்கும் தேதி மற்றும் கடைசி தேதி குறித்து அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
இரண்டு ஆண்டு முதுகலை சட்டப் படிப்பிற்கு ஜூன் 12-ம் தேதி முதல் அதாவது இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி என்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் ஜூலை 4 முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் அந்த வகையில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் சேர மே 10 முதல் 31-ம் தேதி வரை  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
ஐந்தாண்டு ச்அட்டப்படிப்புக்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டு மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பமும் இரண்டு ஆண்டு சட்ட மேல் படிப்பிற்கான விண்ணப்பமும் வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran