1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:34 IST)

சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் 2 அடுக்கு பேருந்து.. சோதனை ஓட்டம் வெற்றி.!

electric buses
சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு அடுக்கு பேருந்து விரைவில் இயக்கப்பட இருக்கும் நிலையில் அதன் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வெற்றி தரமாக முடிந்துள்ளது.  
 
டீசல் பேருந்துகளின் இயக்கத்தை குறைப்பதற்காக பெருநகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே டெல்லி உள்பட ஒரு சில நகரங்களில் மின்சார பேருந்துகளை இயங்கி வரும் நிலையில் தற்போது சென்னையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன.  
 
சென்னையில் இரண்டு அடுக்கு மின்சார பேருந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாகவும் அந்த சோதனை ஓட்டம் வெற்றிபெருமாக முடிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
பெங்களூரில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து மின்சார பேருந்து இயக்கப்பட்டு வருகிறது என்பதும்  நாட்டில் 64 நகரங்களில் மின்சார பேருந்து இயக்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  அணையில் அதிக அளவில் டீசல் பேருந்துகள் ஓடுவதால் அதை மின்சார பேரண்டாக மாற்றினால் சுற்றுச்சூழல் மேம்படும் என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Mahendran