சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:33 IST)

இணையதளம் மூலம் தேர்தல் முடிவுகள்: மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி மற்றும் மறுவாக்குபதிவு பிப்ரவரி 21ஆம் தேதி நடந்தது 
 
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 768 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை 8 மணி முதல் என்ன தொடங்க உள்ளது. தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
 இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது