புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:19 IST)

அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்!

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்திருந்த நிலையில் அந்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. 
 
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மாநில தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அந்த தேர்தலை நடத்த வில்லை என்றும் எனவே தேர்தல் புகார் குறித்து நீங்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளியுங்கள் என்று அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது
 
முன்னதாக திமுகவினர் திருமண மண்டபத்தில் குவிந்து ஆயிரம் ரூபாய், 2,000 ரூபாய் என வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அண்ணாமலை வீடியோ ஆதாரத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் இந்த வீடியோ பதிவுக்கு தான் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பதில் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.