1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Election date may announce in march first week

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு… துணை ராணுவம் வருகை!

தேர்தல்
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடக்கலாம் என்பதால் மார்ச் முதல் வாரமே அதற்கான தேதிகள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இப்போது 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலமும் மே மாதத்தோடு முடிய உள்ள நிலையில் மே மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ஏப்ரல் மாதமே நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி இன்று தமிழக தேர்தல் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் மார்ச் முதல் வாரமே தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாகவே அரசின் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படும் ஏற்பாட்டில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் தேர்தலை ஒட்டி பிப்ரவரி 25 ஆம் தேதி துணை ராணுவப்படை தமிழகத்துக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
விலை உயர்வில் பெட்ரோலுக்கு டஃப் கொடுக்கும் டீசல்!!