செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2021 (08:17 IST)

11 மாதங்களுக்குப் பிறகு குளிர்சாதனப் பேருந்துகளுக்கு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா காரணமாக 11 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி உள்ள பேருந்துகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் என்பதால் கொரோனாவுக்குப் பின்னர் அவற்றை இயக்க மறுக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது 11 மாதங்களுக்குப் பிறகு ஏசி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சில கட்டுப்பாடுகளாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் பயணிக்க அனுமதி இல்லை. பேருந்துகளில் 24 - 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே குளிர்நிலையை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.