1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Election commissuion block a rasa election campaign

ஆ ராசா பிரச்சாரம் செய்ய தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு

Tamilnadu
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதர்காக ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஆ.ராசா அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஆ.ராசா தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதற்காகவும், முதல்வர் பற்றி அவர் பேசிய விவகாரம் குறித்த ஆ.ராசாவின் விளக்கம் திருப்தி அளிக்காததாலும் ஆ.ராசா 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
எனக்கு இன்னொரு முகம் இருக்கு, அது கர்நாடக முகம்: அண்ணாமலை ஆவேசம்