போன்பே, ஜி பே மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம்? – தடை செய்ய கோரி மனு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட மக்களுக்கு போன் பே, ஜி பே மூலம் பணம் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் மக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்க முயற்சிப்பவர்களை தேர்தல் பறக்கு படையினரும் பிடித்து ரொக்கம், பரிசு பொருள் முதலானவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சில பகுதிகளில் மக்களுக்கு நேரடியாக பணம் தராமல் மொபைல் எண் மூலமாக அவர்களது கூகிள் பே, போன் பே போன்ற பணபரிமாற்ற செயலிகள் மூலமாக பணம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ள மதுரை வழக்கறிஞர் ஒருவர் தேர்தல் முடியும்வரை பணிபரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.