திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:13 IST)

கோவையில் யோகி ஆதித்யநாத் வருகையில் ரகளை! – பாஜகவினர் மீது வழக்கு!

கோயம்புத்தூரில் நேற்று பிரச்சாரத்திற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தபோது கடைகளை மூட சொல்லி தகராறு செய்த பாஜகவினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி போட்டியிடும் நிலையில் பாஜக முக்கிய தலைவர்கள் பலர் தமிழகம் வந்து பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்தார்.

அப்போது அவர் செல்லும் பாதையில் திறந்திருந்த கடைகளை மூட சொல்லி பாஜகவினர் பிரச்சினை செய்ததுடன், கற்களை வீசி கலவரம் ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில் இந்த செயலை பல கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.