தொடர்புடைய செய்திகள்
- அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
- கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது ஈபிஎஸ் திடீர் மயக்கம்: அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி
- அதிமுக நிர்வாகிகளின் அடுத்தகட்ட நிர்வாகிகளை அறிவித்த ஓபிஎஸ்: வெல்லமண்டி நடராஜனுக்கு பதவி!
- கூடி பேச ஒரு இடம் இல்லை… தேடுதல் வேட்டையில் ஓபிஎஸ் & கோ!
- அதிமுக அலுவலகத்தில் மோதல்: அனைத்து முன் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி!
தேர்தல் ஆலோசனை கூட்டம்: அதிமுக சார்பில் கோவை செல்வராஜ்!
தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓபிஎஸ் கடிதம்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை செயலகத்தில் நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு ஓபிஎஸ் அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு ஓ.பன்னிர்செல்வம் கடிதம் எழுதினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
