1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election commission send letter to admk

அதிமுக திருப்பி அனுப்பிய கடிதத்தை மீண்டும் அனுப்பிய தேர்தல் ஆணையர்: செம டுவிஸ்ட்

election
அதிமுக திருப்பி அனுப்பிய கடிதத்தை மீண்டும் அதிமுகவுக்கு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் தபால் மூலம் கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என யாரும் இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் மட்டுமே இருப்பதாக கூறி அந்த கடிதத்தை எடப்பாடிபழனிசாமி திருப்பி அனுப்பினார்
 
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதே கடிதத்தை மீண்டும் சத்யபிரதா சாகு  திருப்பிஅனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக கடந்த 16ம் தேதி அனுப்பிய கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய நிலையில் அந்த கடிதத்தை மீண்டும் அதே பெயரில் தேர்தல் ஆணையர் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: மாறுபட்ட தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?