தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி: என்ன காரணம்?
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஜி20 மாநாட்டிற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது மத்திய அரசு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்பியது. அதேபோல் மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பிய போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்பியது
ஆனால் தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்பியதை அடுத்து அப்படி ஒரு பதவி அதிமுகவில் இல்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திற்கு அந்த கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த கடிதம் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Edited by Siva