1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Elangovan compares Jayalalitha and Auto Shankar

ஆட்டோ சங்கரும் ஜெயலலிதாவும் ஒன்றா?: ஆத்திரத்தில் அதிமுகவினர்!

ஆட்டோ சங்கரும் ஜெயலலிதாவும் ஒன்றா?: ஆத்திரத்தில் அதிமுகவினர்!

ஆட்டோ சங்கர்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினரிடையை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டசபையில் வைக்க இருப்பதாகவும், அதனை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இளங்கோவன், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் வைப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
 
மேலும் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் படத்தை ஐஜி அலுவலகத்தில் வைப்போம் என்றார் அதிரடியாக. ஜெயலலிதாவுடன் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரை இளங்கோவன் ஒப்பிட்டு பேசியதால் அதிமுகவினர் கோபத்தில் உள்ளனர்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
ரஜினியோடு கை கோர்க்கும் ஆனந்தராஜ் - போயஸ் கார்டனில் சந்திப்பு