தொடர்புடைய செய்திகள்
- என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி….உக்ரைன் பிரதமர் உருக்கம் !
- டாஸ்மாக் கடைகள் திறப்பதை மக்களே தடுக்கலாம்! – தமிழக அரசு சட்டத்திருத்தம்!
- 130 வருஷத்துல இதுதான் முதல்முறை.. தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த மண்டலம்!
- யுக்ரேன் போர்: வேக்யூம் வெடிகுண்டு என்றால் என்ன?
- உக்ரைனில் இந்திய மாணவர்கள் பயணக்கைதிகளா? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் கல்வி நிலை என்ன?
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க உதவி செய்யப்படும் என்று அரசு தகவல்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர். மாணவர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க உதவி செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வெளிநாடுகள் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
