தொடர்புடைய செய்திகள்
- எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்: என்ன காரணம்?
- அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்: நன்றி தெரிவித்து ஈபிஎஸ் கடிதம்
- பொன்னையன் உயிருக்கு ஆபத்து!? – எச்சரிக்கும் புகழேந்தி!
- எங்களுக்குதான் சொந்தம்.. இழுபறியில் அதிமுக வங்கி கணக்கு!? – குழப்பத்தில் வங்கி!
- அதிமுக அலுவலகத்தை திறக்க வேண்டும்..! – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு!
ஓ.பி ரவீந்திரநாத் அதிமுக எம்.பி இல்லை..! – மாநிலங்களவைக்கு எடப்பாடியார் கடிதம்!
அதிமுகவிலிருந்து ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கப்பட்ட நிலையில் இனி அவர் அதிமுக எம்.பி இல்லை என மாநிலங்களவைக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுந்தியுள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார். இந்த நீக்கப்பட்ட உறுப்பினர்களில் ஓபிஎஸ் மகனும், ராஜ்யசபா எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் ஒருவர்.
இந்நிலையில் தற்போது மாநிலங்களவைக்கு கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து மாநிலங்களவை எம்.பியாக உள்ள ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கப்பட்டுள்ளார். எனவே இனி அவர் மாநிலங்களவையில் அதிமுக எம்.பியாக கருதப்படக்கூடாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாநிலங்களவையில் அதிமுகவின் ஒரே எம்.பியும் இனி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
