ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (13:34 IST)

தூக்கிட்டு போன பென்ச், சேர்லாம் குடுத்துடுங்க..! – சின்னசேலம் கிராமங்களுக்கு எச்சரிக்கை!

Kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளியில் நடந்த கலவரத்தில் எடுத்து செல்லப்பட்ட பெஞ்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை திரும்ப தருமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள சக்தி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 11ம் தேதி பள்ளி முன்பு நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

இதில் போலீஸ் பாதுகாப்பை மீறு உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்ததுடன், பள்ளியை சூறையாடி அங்கிருந்த மின்விசிறி, பெஞ்ச், டேபிள் உள்ளிட்ட பல பொருட்களை அள்ளி சென்றனர்.

இந்நிலையில் தற்போது பள்ளி கலவர சம்பவத்தின்போது அங்கிருந்து பெஞ்ச், டேபிள் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றவர்கள் திருடிய பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்தின் முன்பு போட்டு விடும்படியும் அப்படி செய்யாத பட்சத்தில் காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வருவாய் துறையினர் பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரித்து வருகின்றனர்.