1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi Palanisamy says about power cut

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Edappadi
செயற்கையான மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறது என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். 
 
கோடை காலம் நெருங்கிவிட்டதை அடுத்து கோடை என்றாலே அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மின்வெட்டு. கோடையில் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் மின் தட்டுப்பாடு நிலவும் என்றும் அதனால் மின்வெட்டு ஏற்படுவது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துவதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் முறை வைத்து தான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?