1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (18:04 IST)

ஓ.பி.எஸ். இல்லத்திற்கு திடீரென சென்ற அண்ணாமலை: என்ன காரணம்?

Annamalai
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்திற்கு திடீரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக பாஜகவில் உள்ள நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி திடீரென அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர் என்பதும் இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கின்றனர் என்பது தெரிந்தது. 
 
மேலும் அதிமுகவின் கூட்டணியில் பாஜக இடம்பெறுவது சந்தேகமே என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார். 
 
சமீபத்தில் ஓபிஎஸ் தாயார் மறைந்த நிலையில் அவரது தாயார் படத்திற்கு மாலை அணிவித்து அண்ணாமலை மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அண்ணாமலை, ஓ பன்னீர் சொல்லத்துடன் இணக்கமாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran