செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (06:50 IST)

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

பிரதமர் மோடியின் மிகவும் நம்பகமான செயலாளர்களில் ஒருவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பிகே சின்ஹா என்பவர் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது 
 
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றி வந்த அவர் காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சகங்களில் ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார் 
 
இந்த நிலையில் திடீரென அவர் இன்று ராஜினாமா செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான பிகே சின்ஹா திடீரென ராஜினாமா செய்திருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது