1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi Palanisamy has no clear opinion about lockdown

ஊரடங்கின் அடுத்த கட்டம் என்ன? முடிவுக்கு வராமல் மழுப்பும் எடப்பாடியார்!

ஊரடங்கு
ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென முடிவு செய்யாமல் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். 
 
நேற்று தமிழகத்தில் 6,426 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,426 பேர்களில் 1,117 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,575 ஆக உயர்ந்துள்ளது.  
 
இந்நிலையில் இன்று ஊரடங்கு தளர்வுகளை குறித்து முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் பேசிய அவர், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பிற மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றன. 
 
அதிக பரிசோதனை செய்துவரும் மாநிலம் தமிழகம் தான். இப்போது வரை மருத்துவ குழுவினரின் ஆலோசனைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனியும் தமிழகத்தில் மருத்துவக் குழு ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
முதல்வரின் இந்த கருத்து ஊரடங்கு இருக்கா இல்லையா என்ற சந்தேகத்தை தீர்க்காமல் இன்னும் அதிகரிக்கத்தான் செய்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனித்துறை அமைக்கலாமே? – உயர்நீதிமன்றம் கேள்வி!