புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (21:33 IST)

2 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு: 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏன்?

தேனியில் வரும் 19ஆம் தேதி இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அங்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்றிருப்பதாகவும், அவை எதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேனி தொகுதியில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தேனியில் 2 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 30 விவிபாட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், ஏற்கனவே இந்த தொகுதிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், இதற்கெல்லாம் என்ன கணக்கு என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது
 
மேலும் எத்தனை வாக்கு இயந்திரங்களை மாற்றினாலும் ஓபிஎஸ் மகன் தோல்விதான் அடைவார் என்றும், வாக்கு இயந்திரங்கள் எதற்கு மாற்றப்படுகிறது என கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை என்றும், இந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது பற்றி ஆட்சியர் விளக்கம் தர வேண்டும் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் தரப்படும் என்றும் இந்த தொகுதியின் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.