துணைமுதல்வர் ஒ.பி.எஸ். மகன் சர்ச்சை - பெயர் கல்வெட்டில் இருந்து மறைப்பு..

ravendar
Last Updated: வெள்ளி, 17 மே 2019 (10:53 IST)
தேனி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் ஓபி ரவீந்தரநாத் தேர்தல் முடிவுகள் வரும் முன்னே கல்வெட்டுகளில் தனது பெயருக்குப் பின்னால் எம்.பி. எனப் போட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து  காலைமுதலே மீடியாக்களில் பலத்த  விமர்சனங்கள் எழுந்ததால் தற்போது ரவீந்தரநாத் எம்.பி என்பதை மறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னராகவே தேனி தொகுதியின் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ஓ பி ரவீந்தரநாத் தன் பெயருக்குப் பின் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என போட்டுக்கொண்டார்.
 
தேனி பகுதியில் உள்ள காசி அன்னபூரணி ஆலயத்திற்கு பேருதவி புரிந்ததாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில்தான் ஓ பி ரவீந்தரநாத்தின் பெயருக்குப் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிந்தது. இதுகுறித்து ஊடகங்களில் பலத்த சர்ச்சையை எழுந்தது.
 
இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னரே ஒபிஎஸ் மகனை எம்.பி என குறிப்பிட்டிருந்த கல்வெட்டில் ரவீந்தரநாத் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஏற்கனவே இருந்த கல்வெட்டில் மற்றொரு கல்வெட்டு வைக்கப்பட்டு ரவீந்தரநாத் பெயர் மறைக்கப்படுள்ளதாகத தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :