வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 3 ஜூலை 2025 (18:27 IST)

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!
ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என எண்ணும் தி.மு.க.,-வினருக்கு கடும் கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல்வானந்தம் மரணத்திற்கு, தி.மு.க.,வினர் கொடுத்த சித்திரவதை தான் காரணம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., தொழில்நுட்பபிரிவு செயலாளர், எம். செல்வானந்தம் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழகத்தினருக்கும் அ.தி.மு.க., சார்பில் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
 
பணம் கொடுக்கல் வாங்கலில் மதுரை மண்டல தி.மு.க., பொறுப்பாளர் , மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர், தாராபுரம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட தி.மு.க.,-வினர் கொடுத்த சித்ரவதை தான் செல்வானந்தம் தன் உயிரை மாய்த்துக்கொள்ள காரணம் என தகவல்கள் வருகின்றன.
 
ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என எண்ணும் தி.மு.க.,-வினருக்கு கடும் கண்டனம். செல்வானந்தம் மரணத்திற்கு காரணமான திமுகவினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.,அரசை வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.
 
Edited by Siva