புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (09:04 IST)

இன்னும் ரிசல்ட்டே வர்ல… அதுக்குள்ள எம்.பி.ன்னு கல்வெட்டா ? – ஒ.பி.எஸ். மகன் அலப்பறைகள் !

தேனி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் ஓபி ரவீந்தரநாத் தேர்தல் முடிவுகள் வரும் முன்னே கல்வெட்டுகளில் தனது பெயருக்குப் பின்னால் எம்.பி. எனப் போட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னராகவே தேனி தொகுதியின் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ஓ பி ரவீந்தரநாத் தன் பெயருக்குப் பின் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என போட்டுக்கொண்டுள்ளார்.

தேனி பகுதியில் உள்ள காசி அன்னபூரணி ஆலயத்திற்கு பேருதவி புரிந்ததாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில்தான் ஓ பி ரவீந்தரநாத்தின் பெயருக்குப் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டுள்ளது.